அரசாங்கத்தின் மிகப் பெரிய பத்துமோசடியாளர்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி வெளியிடப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
பாரிய மோசடிகளில் ஈடுபட்ட ஆளும் கட்சியின் பத்து அரசியல்வாதிகள் வரிசைக் கிரமமாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டாவது மிகவும் மோசமான ஊழல் பேர்வழி பற்றிய விபரங்களே 9ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று 9ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.