அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – தீவிரவாத எச்சரிக்கை

333 0

201609280853113254_us-election-2016-polls-donald-trump-and-hillary-clinton_secvpfஅமெரிக்காவில் அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அல்-கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.

தேர்தல் தினத்தன்று அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என நியூயோர்க், டெக்சாஸ் மற்றும் வர்ஜினியா ஆகிய மாகணங்களுக்கு அமெரிக்க அரச அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த அச்சுறுத்தலானது பாரிய அளவிலானது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் விமான நிலையங்கள் மற்றும் கப்பல் வழித் தடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.