சாவகச்சேரியில் தீக்கிரையான வர்த்தக நிலையம்

360 0

சாவகச்சேரி நகரில் வணிக நிலையம் ஒன்று தீயில் விபத்துக்குள்ளாகி அங்கிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் நாசமாகின.

சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள வணிக நிலையத்தில் இந்தத் தீவிபத்து இன்று மாலை ஏற்பட்டது என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பரம்ஸ் என்ற மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அங்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கே காரணம் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் விசாரணைகளின் பின்னரே காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பொதுமக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.அருகில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையத்துக்கும் தீ பரவியது. எனினும் சுமார் 35 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.