சிரியாவில் அலப்போ நகரில் ரஷ்யாவின் போர்நிறுத்தத்தை தீவிரவாதிகள் நிராகரித்துள்ளனர்.
அல்ப்போ நகரில் நிலைகொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளை அங்கிருந்து அகற்றுவதற்கு ரஷ்ய கூட்டுப்படையினர் வான் தாக்குதல்களை நடத்திவந்தனர்.
இந்த தாக்குதல்கள் மனிதாபிமானமற்ற வகையில் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இதனை அடுத்து ரஷ்யா மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல்களை இடைநிறுத்தியிருந்தது.
இந்த போர்நிறுத்தத்தை அடுத்து, அலப்போ நகரில் இருந்து தீவிரவாதிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
இதனை நிராகரித்துள்ள ஆயுததாரிகள். மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.