அரசியலில் நேர்மை, எளிமையை அடையாளமாகக் கொண்டு வாழும் இடதுசாரிகளின் மூத்த தலைவர் நல்லகண்ணு என்று துணை முதல்வர் ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எனக்கு வயதில் இளையவர். ஆனால், அரசியல் களத்தில் மூத்தவர் என திமுக தலைவர் மறைந்த கருணாநிதியால் புகழப்பட்டவர் நல்லகண்ணு. சுதந்திரப் போராட்டத் தியாகி. சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் மக்கள் இயக்கங்களில் பங்கெடுத்ததால் நீண்ட ஆண்டுகள் சிறைவாசமும், தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்த தலைவர்.
எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர், மற்ற அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படக்கூடியவர். அவரளவுக்கு அரசியல் அனுபவம் உள்ள தலைவர்கள் தமிழகத்தில் வெகுசிலரே உள்ளனர்.
நேர்மை எளிமையை தனது அடையாளங்களாக கொண்டு எளியமக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான #நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ட்விட்டரில் அவரது வாழ்த்து:
“நேர்மை எளிமையை தனது அடையாளங்களாகக் கொண்டு எளிய மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான #நல்லகண்ணு ஐயாவுக்கு அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்”.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்குக் கீழே நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.