கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 வரையில் நீர்விநியோக தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி பேஸ்லைன் வீதி, களனி பாலப்பகுதி, தெமட்டக்கொட, கொழும்பு 9, கொழும்பு 13, கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களில் இந்த நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது