மலேசியாவை சேர்ந்த வர்த்தகர் ஏ சுப்பையா ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட 2004 ஆழிப்பேரலையை என்றும் நினைவில் வைத்திருப்பார்.
சுப்பையா அன்று தனது 22 நாள் மகளை கிட்டத்தட்ட இழந்தார்.
2004 டிசம்பர் 26 ம் திகதி பெனாங்கின் பட்டு பெரிங்கியில் உள்ள மியாமி கடற்கரை பகுதியை தாக்கிய பேரலைகள் அவரது கடையுடன் இணைந்த வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை துளசியை மெத்தையுடன் தூக்கிக்கொண்டு சென்றன என அவர் தெரிவிக்கின்றார்.
ஆனால் அதிஸ்டவசமாக இரண்டாவது அலை மெத்தையுடன்துளசியை கொண்டுவந்தது என்கின்றார் அவர்.
இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த சுப்பையான தனது மகள் உயிர்தப்பிய அதிசயத்தை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என குறிப்பிடுகின்றார்.
ஆழிப்பேரலைகள் தாக்கத்தொடங்கிய அந்த நிமிடம் மிகவும் குழப்பமானதாக காணப்பட்டது,மக்கள் அச்சத்தினால் அலறினார்கள் என சுப்பையா அன்றைய நாளை நினைவுகூர்ந்துள்ளார்.
அதற்கு சில செகண்ட்களிற்கு முன்னர் வெளிநாட்டவர் ஒருவர் என்னிடம்வந்து கடலில் தெரிகின்ற மாற்றம் என்ன கேட்டார், கடற்கரையைநோக்கி இரு வெள்ளை கோடுகள் நகர்கின்றன என அவர் தெரிவித்தார் என சுப்பையா தெரிவித்துள்ளார்.
என்னிடம் அவ்வேளை எந்த பதிலும்இருக்கவில்லை நான் பெனாங்கில் டிசம்பர் மாதத்தில் படகுப்போட்டிகள் இடம்பெறுவது வழக்கம் என தெரிவித்தேன் என சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த வெளிநாட்டவர் அதனை ஏற்கவில்லை ஏதோ ஆபத்து என தெரிவித்தார் எனவும் சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் கடல்மட்டம்உயர்ந்தது அனைவரும் அலறியபடி ஓடினார்கள எனவும் சுப்பையா தெரிவித்துள்ளார்.
நான் எனது 22 நாள் குழந்தையை காப்பாற்ற ஓடினேன் ஆனால் என்னால் அங்கு வேகமாக செல்ல முடியவில்லைஎனவும்சுப்பையா தெரிவித்துள்ளார்.
என்னை அலைகள் பந்தாடின நான் தூண் ஒன்றை பிடித்துக்கொண்டுதப்பினேன் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலை தாக்கியவேளை எனதுமனைவியும் மகளும் வீட்டுடன் சேர்ந்த கடையில் இருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நான் எனது மகளை தேடினேன் ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை அவ்வேளை இந்தோனேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் என்னிடம் வந்து எனது குழந்தை மெத்தையுடன்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் எனவும்சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.
அவ்வேளை துளசி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்தார்.அவரைஊடகங்கள் அதிசய குழந்தை என வர்ணித்திருந்தார்.
முதலில் நான் சொத்துக்களை இழந்மை குறித்து கவலையடைந்தேன் ஆனால் அதன் பின்னர் பலர் சந்தித்த இழப்புகளை அறிந்து எனது குடும்பத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளமை குறித்து திருப்தியடைந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ஒவ்வொரு வருடம் டிசம்பர் 26 ம் திகதியும் கடலிற்கு நன்றி தெரிவித்து பூஜைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றார் என சுப்பையா
தன்னை பேராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காக கடவுளிற்கு நன்றி என்கின்றார் துளசி.
எனக்கு நான்கைந்து வயதாகும்போது தந்தை நடந்ததை தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டார்.