பணிமுடக்கல் போராட்டங்களில் ஈடுபடுவது நியாயமற்றது – ஜோன் செவிரட்ன

310 0

volvo-1தொழிலாளர்களதும் அதிகாரிகளதும் வேண்டுகோள்களுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் பணிமுடக்கல் போராட்டங்களில் ஈடுபடுவது நியாயமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்தின இந்த கருத்தை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க போராட்டங்களின்போது தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளில் எந்த வித மாற்றங்களும் செய்யப்படாமல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பணிமுடக்கலில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கியுள்ள நிலையிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் சேவை யாப்பொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச பணியாளர்கள் சங்கத்தினர் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த போராட்டம் இன்றுடன் நான்காவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடளாவிய ரீதியாகவுள்ள தொழில் காரியாலயங்களின் செயற்பாடுகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.