சிலி நாட்டின் துறைமுக நகரமான வால்பரைசோவின் அருகே உள்ள ரோகுவன்ட் மற்றும் சான் ரோக் மலைப்பகுதியில் குடியிருப்பு பகுதி வழியாக காட்டுத் தீ பரவியதால் 200 வீடுகள் அழிந்துள்ளன. ஆனால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மேற்படி தீயால் நத்தார் தினத்துக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை முதல் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பிடித்தது பற்றி கேள்விப்ப்டட தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை வெளியேற்றிவிட்டு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதிக கோடை வெப்பநிலை மற்றும் பலத்த காற்று தீ வேகமாக பரவியுள்ளது.
பிராந்திய மேயர் கோன்சலோ புளூமெல், குறித்த தீ விபத்து தொடர்பாக இதுவரை சேகரிக்கப்பட்ட சான்றுகள் படி திட்டமிட்டு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சுமார் 90,000 பொதுமக்களுக்கு மின்சாரம் தடைசெய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் இரண்டு பாடசாலைகளில் தங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.
கிட்டத்தட்ட 120 ஹெக்டெயர் (445 ஏக்கர்) புல்வெளி நிலம் அழிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா டுவிட்டரில், “வால்பராசோ மலைகளில் மற்றும் குறிப்பாக கிறிஸ்துமஸ் தினத்தன்று பல குடும்பங்களை பாதித்த தீ விபத்து குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில், மத்திய சிலி நகரமான சாண்டா ஓல்கா காட்டுத்தீயால் அழிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், நகரம் முழுவதும் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 12 பேர் உயிரிழந்ததுடன், 2,000 வீடுகள் அழிக்கப்பட்டது.