இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இந்தியாவின் புதுடில்லியில் நடைப்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கையின் மீன்பிடிதுறை அமைச்சர் மஹிந்த அமரவீர, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான மீனவ பிரதிநிதிகள் மட்ட பேச்சு வார்த்தை அண்மையில் டில்லியில் இடம்பெற்றிருந்த நிலையில், அது தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.