யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் வீடு ஒன்றில் இருந்து பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மட்டுவில் தெற்கு வீரபத்திரர் கோவில் ஒழுங்கை மட்டுவில்லைச் சேர்ந்த தவசி இராசையா என்பவரின் வீட்டியேலே 15 ஆயிரம் ரூபா பணமும் 22 பவுன் நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குறித்த களவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர்களால் முறையிடப்பட்டுள்ளது.