இந்திய – இலங்கை வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் ஆரம்பம்

329 0

ob_2cd993_indo-sr-lanka-annual-defence-dialogueஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த முறை இடம்பெற்ற கலந்துரையாடல் நான்காவது தடவையாக இடம்பெற்றதாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் இந்திய பாதுகாப்பு செயலாளர் மோகன்குமார் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி ஆகியோரின் தலைமையில இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளின் சார்பிலும் பாதுகாப்பு அமைச்சுக்களின் அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், படை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கலந்துரையாடலின்போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள், கூட்டுப்பாதுகாப்பு நடவடிக்கைகள் கடல் பாதுகாப்பு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்;டுள்ளன.

அத்துடன், இந்தியக்குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் நேற்று திருகோணமலைக்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.