மற்றவருடைய கருத்துக்கு மதிப்புக் கொடுத்து ஒன்றிணைந்து கலந்துரையாடி தீரமானங்களை ஒன்றுமையுடன் எடுப்பது தான் ஐனநாயகம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி வலய கல்வி அலுவலகத்தில் மாணவ பாரளுமன்ற செயற்பாட்டை வலுப்படுத்தல் தொடர்பாக அதிபர், ஆசிரியர்களுக்கான முக்கியத்துவம் பற்றிய வலுவூட்டல் செயலமர்வின் போது இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
செயலமர்வில் தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.