சுலக்சன் சுட்டுக் கொலை, இதனால் ஏற்பட்ட விபத்தால் கஜன் பலி -நீதவானின் மரண விசாரணை அறிக்கையின் ஊடாக தீர்ப்பு-

375 0

download-35_1யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார் என்றும், மற்றையவர் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்ததால் உயிரிழந்தார் என்று நீதவான் நடத்திய மரண விசாரணையில் தீர்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி காங்கேசன்துறை வீதி கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியால் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக இரு மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இச் சம்பவத்தில் இரு மாணவர்களும் உயிரிழந்திருந்தனர். இது தொடர்பில் சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் மரண விசாரணை நடத்தியிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு அவர்களுக்க எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரண விசாரணை நடத்திய நீதவானின் அறிக்கை மன்றில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
இதன்படி சம்பவ தினத்திலன்று காங்கேசன்துறை வீதி கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியால் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக இரு மாணவர்கள் மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுன்னாகம் – கந்தரோடைப் பகுதியினைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் என்னும் மாணவரின் உடலில் துப்பாக்கிச் சூடு பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிலை ஓட்டிச் சென்ற சுலக்ஷன் சற்றுத் தூரம் சென்று மதிலுடன் மோதி வித்துக்குள்ளாகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு மற்றும் விபத்து ஆகிய இரு சம்பவத்திலும், விஜயகுமார் சுலக்ஷசன் என்னும் மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்துள்ளார்.
அவர் செலுத்திச் சென்று விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிலின் பின்னால் இருந்த கிளிநொச்சி – இரணைமடுப் பகுதியினைச் சேர்ந்த நடராஜா கஜன் என்னும் மாணவர் விபத்தினால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளர் என்றும் மரண விசாரணைகள் ஊடாக தீர்பளிக்கப்படுகின்றது என்று வாசித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது,