யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொடிகாமம் பொலிஸ் நடமாடும் சேவையானது வரணி, சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டுப்பிரதிகள் என்பன உடனடியாக வழங்கப்பட்டு வருவதுடன், ஏனைய முறைப்பாடுகள் தொடர்பிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்;;டு உடனடியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என கொடிகாம பொலிஸ் அதிகாரி எதிரிசிங்க தெரிவித்தார்.
நடமாடும் சேவையில் எதிர்வரும் 15ஆம் திகதி பொது மக்களுக்கான விசேட மருத்துவ முகாம், 20ஆம் திகதி வரணி விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியும் நடைபெறவுள்ளது.
21ஆம் திகதி வரணி இடைக்காடு சுப்பிரமணிய வித்தியாலம் மற்றும் நாவற்காடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் சித்திரப் போட்டிகளும் நடாத்தப்படவுள்ளன.
கடந்த மாதம் 30 ஆம் திகதி வரணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சேவையானது இம்மாதம் 30 திகதி வரை நடைபெறவுள்ளது.