விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளை மருந்தகங்களில் விலை குறைக்காது விற்பனை செய்யும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்க சுகாதார அமைச்சு இரண்டு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, 011 30 71 073 மற்றும் 011 30 92 269 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 48 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த மருந்து வகைகள் விலை குறைக்கப்படாது விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயத்தை கருத்திற் கொண்டே சுகாதார அமைச்சு இந்த தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.