வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள சி.சி.ரீ.வி விற்பனை நிலையம் நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்துள்ளது.

விடுமுறை நாளான நேற்று  குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் மூடப்பட்ட கடையில் இருந்து புகை வெளிக்கிளம்பியுள்ளது.

இதனை அவதானித்த சிலர் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன் தீயணைப்பு பிரவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர்  பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்தில் வியாபார நிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.