ஜெனிவா பிரேரணையை ஒருபோதும் ஏற்கோம்-நிமல் சிறி­பா­லடி

186 0

போர்க் குற்­றங்கள் என்ற பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்து இலங்கை அர­சாங்­கத்தை நெருக்­க­டிக்குள் தள்ள சர்­வ­தேச சக்­திகள் முயற்­சித்து வரு­கின்றன. முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை போல சர்­வ­தேச சக்­தி­களின் அழுத்­தங்­க­ளுக்கு தாம் அடி­ப­ணி­யப்­போ­வ­தில்லை. அதே­போன்று ஜெனிவா பிரே­ர­ணையை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம் எனவும்  அமைச்சர் நிமல் சிறி­பா­லடி தெரி­வித்தார்.

புதிய அர­சாங்­கத்தின் நகர்­வுகள் மற்றும் சர்­வ­தேச விவ­கா­ரங்­களில் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டுகள் குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஐந்து ஆண்­டு­களில் ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு அடி­ப­ணிந்தே ஆட்சி செய்­தது.. சர்­வ­தேச கட்­டுப்­பா­டு­களை ஏற்­றுக்­கொண்டு சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு முன்னாள் மண்­டி­யிட்டு நாட்­டினை தவ­றான திசையில் கொண்டு சென்­றது. ஆனால் நாம் இன்று உரு­வாக்­கி­யுள்ள அர­சாங்கம் ஒரு­போதும் சர்­வ­தேச அமைப்­பு­க­ளுக்கோ அல்­லது அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கோ புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கோ அடி­ப­ணிந்து செயற்­ப­டாது.. எமது கொள்கை தேசி­யத்தை கட்­டி­யெ­ழுப்பும் கொள்­கை­யாகும். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெளி­வான சிந்­த­னையில் உறு­தி­யாக தேசிய வாதக் கொள்­கையில் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றனர். அவ்­வாறு இருக்­கையில் நாம் சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு அடி­ப­ணிய மாட்டோம்.

பொதுத் தேர்­தலில் நாம் முன்­வைக்கும் கொள்­கைகள் அனைத்­துமே மக்­களால் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய கொள்­கை­யாக அமையும். பொம்மை ஆட்­சியை கொண்டு செல்­லாது நாட்­டுக்கு ஏற்ற கொள்­கை­க­ளுடன் அவ­சி­ய­மான உடன்­ப­டிக்­கை­க­ளுடன் நாம் எமது அர­சாங்­கத்தை கொண்டு நடத்­துவோம். இதில் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள் குறித்து இன்று பல விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன

குறிப்­பாக அமெ­ரிக்­கா­வுடன் செய்­து­கொள்ள முயற்­சிப்­ப­தாக கூறப்­படும் விட­யத்தில் அமைச்­ச­ர­வையில் உறு­தி­யான தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன .இப்­போ­தைக்கு இந்த உடன்­ப­டிக்­கைகள் எத­னையும் செய்­து­கொள்­வ­தில்லை என்ற தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது.

அதேபோல் அடுத்த ஆண்டு மீண்டும் ஜெனி­வாவில் இலங்கை விவ­கா­ரங்கள் கையில் எடுக்­கப்­படும். இன்று புதிய அர­சாங்­கத்தை பழி­வாங்கும் நோக்­கத்தில், சர்­வ­தேச சக்­திகள் ஒன்­றி­ணைந்து இலங்­கைக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையில் போர் குற்­றங்கள் இடம்­பெற்­ற­தாக முன்­னைய அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்ட கார­ணி­களை முன்­வைத்து எமது அர­சாங்­கத்தை நெருக்­க­டிக்குள் தள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அரசாங்கம் நிராகரிக்கும். பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எமது இராணுவத்தை பழிவாங்க நினைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என்றார்.