விமல் வீரவன்சவின் மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு

325 0

146831_2தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மகள் சமூக வலைதளங்கள் ஊடாக வெளியிடப்படும் தகவல்கள் தம்மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்ச மற்றும் சட்டத்தரணி பிரேம்நாத் தெலேவத்த ஆகியோருடன் சென்றே அவர் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் சட்டத்தரணி சட்டத்தரணி பிரேம்நாத் தெலேவத்த உடகங்களுக்கு தெரிவிக்கையில்,

அண்மையில் பாராளுமனற் உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் துரதிஷ்ட வசமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்திருதார் அது தொடர்பிலான சட்ட வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணை நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று பல ஊடகங்களும்,சமூக வலைத்தளங்களும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகளின் மனது புன்படும் அளவிலான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இந்த விவகாரத்தை ஊடகங்கள் மிகக் கவனமாக கையாள வேண்டும்.

அதனால் நாட்டு சிறுவர்கள் மீது சேறு பூசும் செயற்பாடுகள் சட்ட விரோதமானது அத்துடன் இறந்துபோன இளைஞனுக்கும் செய்யும் துரோகமாகும் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்ய வேண்டாம்.

தற்போது இது தொடர்பில் நாம் மேற்கொண்ட முறைபாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள அதிகாரிகள் எமக்கு நியாயம் பெற்றுத் தருவதாக வாக்களித்தனர் என்றார்.