பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில்சிக்கினார்

312 0

625-256-560-350-160-300-053-800-461-160-90இலங்கையின் பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பொலிஸாரினால் குறித்த வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

கடவத்த நோக்கி செல்ல கெலனிகம பகுதிக்கு நுழையும் போது இந்த வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், பின்னர் அந்த வாகனம் பிரபல மாஹாநாயக்க தேரருக்க சொந்தமானதென பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தினுள் பிரபலமான மாஹாநாயக்க தேரர் ஒருவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெகு விரைவில் டிபென்டர் வாகனத்தை பதிவு செய்துக் கொள்ளுமாறு தேரரிடம் கூறுங்கள் என அந்த வாகனத்தின் சாரதிக்கு பொலிஸ் அறிவுரை வழங்கி வாகனத்தை விடுவித்துள்ளனர்.