மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா மேன்முறையீடு செய்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில், துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சட்டத்தரணிகள் ஊடாக துமிந்த சில்வா மரண தண்டனைகு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
மருத்துவ காரணங்களுக்காக மேன்முறையீட்டை துரித கதியில் பரிசீலனை செய்யுமாறு கோருவதாக மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை துரித கதியில் ஆவணங்களை பரிசீலனை செய்யுமாறு மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி குழாம், நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.