ராஜபக்ஸவினரை சீண்டா விட்டால் இவர்களுக்கு நித்திரையே வராது

310 0

namal-rajapaksa-3நாட்டில் ஏதேனும் ஊழல் தொடர்பான செய்திகள் வெளிவந்தாலோ அல்லது பொய்யான குற்றச்சாட்டுக்களை ராஜபக்ஸவினர் மீது சுமத்தாவிட்டாலோ FCIDயினருக்கு நிம்மதி இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று வருகைத்தந்திருந்த நாமல், விசாரணைகள் முடிந்து வெளியே வந்து ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து அதை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக இன்று தன்னை அழைத்திருந்ததாகவும், இந்த வாகனத்துடன் தொடர்புடைய அனைவரிடமும் நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

CID மற்றும் FCIDஇல் உள்ளவர்களுக்கு ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த யாரையேனும் அழைத்து விசாரணைகளை நடத்தவில்லை என்றால் அவர்களுக்கு பசி, நித்திரை, பதவி உயர்வு என எதுவும் வராது என குற்றம் சுமத்தினார்.

மேலும் இன்றைய விசாரணைகளின் போது தான் கைது செய்யப்படலாம் என்ற ஒரு நிலைப்பாட்டில் நாமல் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.