தான் ஒரு குற்றவாளியென இதுவரை உறுதியாகவில்லை என, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது வௌிநாட்டு பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டுக்கு திரும்பிய வேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தான் வௌிநாடு சென்றது தனது நெருங்கிய நண்பரின் திருமணத்தின் நிமித்தமே என சுட்டிக்காட்டிய அவர், தவறிழைக்காத நிலையில் தாம் நாட்டை விட்டு தப்பி செல்ல வேண்டிய தேவையெதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது கூறிய அவர், அவரது தீர்ப்புக்கு அடி பணிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை எவரும் தன்னை தவறிழைத்தவனாக பெயரிடவில்லை எனவும் அர்ஜூன மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.