மகிந்தவுடன் இணையும் மலையக தேசிய முன்னணி- பசில் ராஜபக்ஸ

310 0

basil-2_ci190808792_4555515_19072016_kll_cmyகூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் மலையக தேசிய முன்னணி ஒன்று கூட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மலையக தேசிய முன்னணியின் தலைவர் எஸ். ராஜ் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை பத்தரமுல்லயில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளதுடன் தங்கள் ஆதரவையும் வழங்குவதாக கூறியிருந்தார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர் கூட புதிய கட்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.