வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது46) எனும் நபரே இவ்வாறு மரணித்தவர் என்று கூறப்படுகின்றது.
நேற்றைய தினம் உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்காக படுக்கைக்காக சென்ற வேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த வேளையிலேயே மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் இவர் மயக்கத்துடன் தான் இருக்கின்றார் என நினைத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.அங்கு சென்றதும் தான் தெரியவந்தது மரணமடைந்து விட்டாரென்று.
தமக்கு இதில் பலத்த சந்தேகம் உள்ளதாகவும் விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கும் என ஊகிப்பதாகவும் இவருக்கு இதுவரை வருத்தம் ஏதும் இல்லையெனவும் நல்ல சுகதேகத்துடன் ஆரோக்கியமாகவே காணப்பட்டார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அமலதாஸ் 2011.04.23 அன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
https://www.youtube.com/watch?v=8HJ-RdM1DmE