யாழ்.பல்கலை மாணவர் படுகொலை – கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்

325 0

14580342_783431398462611_1765693396_nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிடப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் இருவர் சார்ப்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன் மற்றும் எம். கணேசராஜா முன்னிலையாகினர்.