எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராகவே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆளுமை இருக்கின்ற போதிலும், அதனை வேண்டுமென்றே தாமதித்துவருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை இந்த சந்திப்பத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச, புதிய கட்சிக்கான புதிய 12 ஆயிரம் கிளைகள் அடுத்த வாரத்தில் நிறுவப்படும் என குறிப்பிட்டார்.