அரச நிறுவனங்களுக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட மைத்திரி

316 0

13567364_10154165482046327_948806607344350334_nஅரசாங்கத்தின் இரண்டு பிரதான நிறுவனங்களை பார்வையிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அந்த அமைச்சின் கீழ் உள்ள பொறியியல் அலுவலகம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று மாலை சென்ற ஜனாதிபதி, அந்த நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.ஜனாதிபதி முதலாவதாக பொரளையில் உள்ள பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைகள் பணியகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதன் நடவடிக்கைகளை கண்காணித்த ஜனாதிபதி பின்னர் தலைவர்கள் உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் வினவியுள்ளார்.பொறியியல் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனைகள் பணியகத்தில் எதிர்வரும் 4 வருடங்களுக்கான செயற்பாட்டு திட்டத்தினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர். தற்போதைய அபிவிருத்தி பணிகளுக்காக நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் உதவிகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சென்ற ஜனாதிபதி அதன் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.இதன்போது எதிர்கால சந்ததியினருக்காக சுற்றாடலை பாதுகாக்கும் பிரதான பொறுப்பு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.மோசடி வர்த்தகர்களிடம் இருந்து சுற்றலாடலை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.