இலங்கையில் தமிழீழத் தனியரசை உருவாக்கும் பிரேரணையொன்று ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை மதுரையிலுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.சிவசுப்ரமணியம் முன்வைத்துள்ளார். இப்பிரேரணைக்கு அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சே கிளாக்கும் பங்களிப்புச் செய்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் 6ஆவது உறுப்புரிமை தமிழீழம் ஒன்று உருவாகத் தடையாகவுள்ளதாகவும், இதனால் குறித்த உறுப்புரிமையை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பிரேரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரேரணையொன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.