விமல் ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னிலையானார்.

317 0

wimal-weerawansaதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

நிர்மாணம், பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நடந்ததாக கூறப்படும் ஒரு கோடியே 77 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி சம்பந்தமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஆணைக்குழுவில் வாக்கு மூலத்தை வழங்கி விட்டு சென்றுள்ளார் எனவும் இவருடன் மொஹமட் முஸம்மில் உட்பல பலர் வருகைத் தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.