அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் அடங்கிய கப்பலின் கெப்டனான உக்ரைன் பிரஜை கெனாட் குரோரிலோவை, காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமையத் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்ட விரோதமாக ஆயுதங்களை ஏற்றிச் சென்ற குற்றச் சாட்டில் அவன்கார்ட் கெப்டன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.