உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா தற்போது தனக்கு தேவையான உணவை எழுதிக்கேட்டு வாங்கி சாப்பிட்டு வருகிறார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை கடந்த மாதம் 21ஆம் திகதி கடைசியாக அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் அவரது உடல் நலம் குறித்து அடுத்த 4 நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.