மருந்துகள் அதிக விலையில் விற்பனையா? முறையிட தொலைபேசி இலக்கம்

320 0

03-1472899890-5-tabletsமருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

011-3071073 மற்றும் 011-3092269 என்ற இலக்கங்களுக்கு அழைத்து முறைப்பாடுகள் ஏதேனும் இருப்பின் பொது மக்கள் தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விலை குறைப்பினால் மருந்துப்பொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மருந்துகளின் விலைகளை குறைக்காமல் விற்பனை செய்யுமாயின் அதற்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்வதற்காகவே இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 48 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டு கடந்த மாதம் 21ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.