இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் இன்று (16) மாலை கைதுசெய்யப்பட்டார்.
அதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.