மரக்கறிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பெரிய வெங்காயம் கிலோகிராம் ஒன்றின் விலை 550 ரூபாயாக காணப்படுகிறது.
அத்துடன், கரட் கிலோகிராம் ஒன்றின் விலை 250 ரூபாயாகும்.
அத்துடன், போஞ்சி உள்ளிட்ட ஏனைய மறக்கறிகளின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளன.
நிலவுகிற சீரற்ற காலநிலை காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.