சிறைகளில் வாடும் தமிழர்களை மீட்க முன்வாருங்கள்!

593 0

தாய்லாந்து சிறைகளில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல ஆண்டுகளாக விடுதலையுமின்றி வாடும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனப் பிரிவில் செயற்பட்டு போரின் பின்னான காலப்பகுதியில் ஶ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்ப்பட்ட செல்வம் மாமா எனும் போராளியின் மகன் தாய்லாந்து சிறையில் கொடுமைகளை தாங்கமுடியாது தனது கழுத்தை அறுத்துள்ளார்.

ஶ்ரீலங்காவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் பெருமளவிலான தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களை சொத்துக்களையும் இழந்து புலம்பெயர்வதற்கான பயணங்களை மேற்கொண்டார்கள். புலம் பெயர்ந்த பெருமளவானவர்கள் பாதுகாப்பான நாடுகளிற்கு சென்றடையாது வேறு நாடுகளின் சிறைகளில் அகப்பட்டு தங்கள் அவலங்களை வெளித்தெரிவிக்கக் கூடிய வழியேதுமின்றி வாடுகிறார்கள்.

அகதிகளிற்கான ஐக்கிய நாடுகளின் பிரிவுகளும் சிறைகளில் வாடும் அப்பாவித்தமிழர்களின் பிரச்சனைகளை மனிதாபிமான கண்கொண்டு பாராது பாராமுகமாக இருந்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

தாய்லாந்து சிறையில் அகப்பட்ட செல்வம் மாமாவின் மகன் அச் சிறைகளில் குடிக்க மற்றும் அவசியத் தேவைகள் எவற்றிற்கும் போதியளவு நீர் கிடைக்காமலும் குற்றச்சாட்டுகள் எதுவின்றி தொடர்ந்து தடுத்த வைத்திருக்கப்பட்ட சூழலில் பெரும் மன உளைச்சலிற்குள்ளாகி தனது கழுத்தை கூரிய ஆயதத்தால் அறுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.

உலகெங்கும் வாழும் சட்ட வல்லுனர்களும் இயலுமையுள்ள யாவரும் நிர்க்கதியாக நாடுகளின் சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழர்களை மீட்க முன்வரவேண்டியதே காலத்தின் கடமையாகும்.

செல்வம் மாமா சுடப்பட்டடது தொடர்பான செய்தித்துண்டு.

செல்வம் மாமாவின் மனைவியின் கடிதம்