இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவுக்கான இதுவரை காலமும் இருந்து வந்த 36 ரூபா என்ற ஒருங்கிணைந்த வரி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 08 ரூபா என்ற சிறப்பு பொருட்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.