நாட்டை நேசிக்கும் மக்களின் ஆதரவைப்பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் (எம்.சி.சி) தேசத்துரோக உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திட கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் மிலேனியம் சவால் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் மேற்கொள்வதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே அதுரெலிய ரத்ன தேரர் இதனை தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து , பொலிசார் சுயாதீனமான முறையில் செயற்படுகின்றனர் . கடந்த அரசாங்கத்தில் வைத்தியர் சாபியின் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பான முறையில் இடம் பெற்றன. அரசியல் தலையீடுகள் காணப்பட்டன.
இந் நிலையில் புதிய அரசாங்கத்தில் குறித்த வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.