வைத்திய சிகிச்சைக்காக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிங்கப்பூர் செல்வதற்கு நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ச.தெ.ச. நிறுவனத்தினூடாக  விளைாயட்டு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையின்போது இடம்பெற்ற மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவருக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே மஹிந்தனந்த அளுத்கமவுக்கு நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை இந்த வழக்கில் மேலும் ஒரு பிரதிவாதியான ச.தொ.ச. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோவுக்கு டிசம்பர் 25 முதல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிபதிகள் ஆர்.குருசிங்க, அமல் ராணராஜா, சஷி மகேந்திரன் ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமிலேயே இந்த அனுதி வழங்கப்பட்டுள்ளது.