இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

336 0

201611041052159638_toll-from-indonesia-boat-sinking-rises-to-36_secvpfஇந்தோனேசியா அருகே மலேசிய தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற இயந்திரப் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன மேலும் 24 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மலேசிய நாட்டின் தென்பகுதியில் இருந்து இந்தோனேசியா நாட்டில் வேலை செய்ய சில தோட்டத் தொழிலாளர்கள் சுமார் நூறுபேரை ஏற்றிகொண்டு கடந்த புதன்கிழமை ஒரு இயந்திரப் படகு கடல் வழியாக சென்று கொண்டிருந்தது.

சிங்கப்பூருக்கு தெற்கேயுள்ள பட்டாம் தீவு வழியாக சென்றபோது இன்று அதிகாலை கடலில் பலத்த காற்றுடன் திடீரென்று எழுந்த பேரலைகளில் சிக்கிய அந்தப் படகு பாறைமீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்தப் படகில் சென்ற தொழிலாளர்களில் 17 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 பேர் மீட்கப்பட்டதாகவும், எஞ்சியோரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் பட்டாம் தீவை சேர்ந்த ரியாவ் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விபத்தினால் கடலில் மூழ்கி தத்தளித்த 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், இதுவரை 36 பிரேதங்கள் கிடைத்துள்ளதாகவும், காணாமல் போன மேலும் 24 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.