தஞ்சையில் மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி நகைகள் சிக்கின

322 0

201611041131226451_mini-van-and-pulled-carried-rs-1-crore-jewelery_secvpfதஞ்சையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கின. உரிய ஆவணங்கள் காண்பித்ததால் நகைகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.

தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் தஞ்சை தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள சிந்தாமணி குடியிருப்பு அருகே பறக்கும்படையினர் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, போலீஸ்காரர்கள் கவுதமி, ஆல்பர்ட்தாமஸ் கொண்ட குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். வேனில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. வேனில் இருந்தவர்கள் இந்த தங்க நகைகள் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் உள்ள ஒரு நகைக்கடைக்கு எடுத்துச்செல்வதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் அதற்கான ஜெராக்ஸ் காப்பி வைத்திருந்தனர். அதனை பறக்கும்படை குழுவினர் ஏற்கவில்லை. நகை கொண்டு செல்வதற்கான அசல் காப்பியை காட்டிவிட்டு எடுத்துச்செல்வமாறு கூறி வேனை பிடித்து வைத்தனர்.

இதையடுத்து வேனில் வந்தவர்கள் வாட்ஸ்-அப் மூலம் அசல் காப்பியை பெற்று பறக்கும்படை குழுவினரிடம் காண்பித்தனர். இதையடுத்து நகைகளை அதிகாரிகள் எடுத்துச்செல்ல அனுமதித்தனர். அதன் பின்னர் அவர்கள் நகைகளை கடைகளுக்கு எடுத்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.