முறிவிநியோக விசாரணை நீதிமன்றத்துக்கு – ஜனாதிபதி

315 0

maithiri1மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் குறித்த விசாரணைகள் முழுமையாக நீதிமன்றத்து மாற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது மத்திய வங்கியின் முறி விநியோகம் குறித்த கோப் குழு அறிக்கை தொடர்பிலேயே அதிகம் பேசப்படுகிறது.

இது தொடர்பான தமது உத்தியோகபூர்வு நிலைபாடானது, இந்த விடயத்தில் இருந்து சகல அரசியல்வாதிகளும் விலக வேண்டும் என்பதாகவும்.

முன்னாள் அரசாங்கத்தில் இருந்து விலகி புதிய அரசாங்கத்தை தோற்றுவித்தமையானது, பிழை செய்த ஒரு சாராரை தண்டித்து, இன்னொரு சாராருக்கு பிழை செய்ய அனுமதிப்பதற்காக அல்ல.

தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதற்காக நீதிமன்றத்தின் ஊடாக மத்தியவங்கியின் முறிவிநியோக விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.