கோப் குழு முன்வைத்த மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பான அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் ஜனவரி மாதத்திலேயே நடத்தமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அவை தலைவர் லச்மன் இதனைத் கிரியெல்ல தெரிவித்துள்ளார்
பாதீடு முன்வைக்கப்படுவதற்கு முன்னர் இது குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மஹிந்த தரப்பு கோரி வருகிறது.
எனினும் இந்த அறிக்கையை தற்போது சட்ட மா அதிபர் திணைக்களம் ஆய்வு செய்து வருகிறது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரை வரும் வரையில் விவாதம் எதனையும் நடத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.