வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களுக்கான உத்தேச ஓய்வூதிய திட்டம் ஜனவரி மாதம் அமுலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு இதற்கான யோசனையை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இதன்அடிப்படையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஓய்வூதிய திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.