திறைசேரியில் உள்ள பொது மக்களின் சொத்துக்களை சூறையாடும் சக்தியை தோல்வி அடைய செய்வதற்கு மக்கள் சக்தி ஒன்று திரள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
திறைசேரியில் உள்ள பொது மக்களின் நிதியை கொள்ளையிடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனை ஜே வி பி ஒரு போதும் அனுமதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.