ஐ.எஸ். தீவிரவாதிகள் சித்திரவதை

318 0

amnesty-international-logoமோசூல் நகருக்கு வெளியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது மோசுல் நகரம் ஈராக்கிய படையினரின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது.

நகருக்கு வெளியில் உள்ள கிராமங்கள் ஐ.எஸ் .தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் உள்ள முன்னாள் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்கப்பட்டும், துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.