டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஐந்து மணி நேரம் அவர் டெல்லி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, நள்ளிரவு அளவில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் பிரதி முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்துக் கொண்ட இராணுவ அதிகாரி ஆர்.கே க்ரெவலின் குடும்பத்தை சந்திக்க சென்ற வேளையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இரண்டு சந்தர்ப்பங்களில் குறித்த அதிகாரியின் குடும்பத்தை சந்திக்க சென்ற வேளையில் தடுத்து வைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.