மத்திய வங்கியின் முறி விநியோகம் குறித்து கண்காணிப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மத்திய வங்கியின் முறிவிநியோகத்தில் முறைக்கேடுகள் இடம்பெறாது தடுப்பதற்காக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.