கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு நட்டஈடு

300 0

kilinochi-fireகிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இதற்கான பிரேரணையை முன்வைத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி இந்த தீப்பரவல் ஏற்பட்டது.

இதில் 122 கடைகள் வரையில் சேதமடைந்திருந்தன.

அவற்றின் உரிமையாளர்களுக்கு நட்ட ஈடுவழங்குவதற்காக 74 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்துக்கான தீயணைப்பு படையினரை உருவாக்குவதற்காகவும், தீயணைப்பு வாகனங்களை வழங்குவதற்காகவும் மேலதிகமாக 97 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.