பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கை விஜயம்!!

318 0

paronasபிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை,கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பரோனஸ் அனெலி ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.